தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

இரண்டாம் திருமண வரன்களிடம் மேட்ரிமோனியில் மோசடி செய்த சம்பவம்: இருவர் கைது - சென்னை செய்திகள்

மேட்ரிமோனி மூலம் மோசடியில் ஈடுபட்டு கைதான நைஜீரியர்கள் இரண்டு பேரை ஐந்து நாள் காவலில் எடுக்க மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் காவல் துறையினர் எழும்பூர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.

மேட்ரிமோனியில் மோசடி
மேட்ரிமோனியில் மோசடி

By

Published : Sep 13, 2021, 6:58 PM IST

Updated : Sep 13, 2021, 9:35 PM IST

சென்னை: மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் காவல் துறையினருக்கு மேட்ரிமோனியில் பண மோசடி செய்தது தொடர்பாக 15க்கும் மேற்பட்ட புகார்கள் குவிந்தன.

இரண்டாம் திருமணம் செய்பவர்கள் குறி...

குறிப்பாக தங்களது இரண்டாம் திருமணத்துக்காக மேட்ரிமோனியில் பதிவு செய்த, வசதி படைத்த குடும்பத்துப் பெண்களை குறிவைத்து, வெளிநாட்டில் மருத்துவராக இருப்பதாகக் கூறி போலியான பெயர், அடையாள அட்டைகளைப் பயன்படுத்தி ஒரு கும்பல் பண மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.

இவ்வழக்கில் தனிப்படை அமைத்து டெல்லி சென்ற மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர், மோசடியில் தொடர்புடைய பாலினஸ் சிகேலுவோ, சிலிடஸ் கேஸ்சுக்வு ஆகிய இரு நைஜீரியர்களை கைது செய்து சென்னை அழைத்து வந்தனர். பின்னர் அவர்களை நீதிமன்றம் முன் நிறுத்தி, சிறையில் அடைத்தனர்.

மேட்ரிமோனியில் மோசடி

வசதியில்லாத மக்களின் வங்கிக் கணக்குகள் மூலம் மோசடி

இந்நிலையில் இந்தக் கும்பல் வட மாநிலங்களில் உள்ள வசதியில்லாத மக்களை அணுகி சிறிய தொகை கொடுத்து, அவர்களின் வங்கிக் கணக்குகளைப் பெற்று, அதன் மூலம் பணப் பரிமாற்றம் நடத்தி மோசடியில் ஈடுபட்டதை சைபர் கிரைம் காவல் துறையினர் கண்டுபிடித்தனர்.

இந்த மோசடியில் மேலும் சில நைஜீரியர்களும் சம்மந்தப்பட்டுள்ளதை கைதான நைஜீரியர்கள் மூலம் மத்தியக் குற்றப்பிரிவு சைபர் கிரைம் காவல் துறையினர் அறிந்தனர்.

அதனடிப்படையில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பாலினஸ் சிகேலுவோ, சிலிடஸ் கேஸ்சுக்வு ஆகிய இரு நைஜீரியர்களை ஐந்து நாள் காவலில் எடுத்து விசாரணை நடத்த திட்டமிட்டு சைபர் கிரைம் காவல் துறையினர் எழும்பூர் நீதிமன்றத்தில் இன்று (செப்.13) மனுத்தாக்கல் செய்துள்ளனர். விரைவில் இந்த மனு மீதான விசாரணை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Last Updated : Sep 13, 2021, 9:35 PM IST

ABOUT THE AUTHOR

...view details