செங்கல்பட்டு ஊரப்பாக்கம் பகுதியில் உள்ள காபி கடையில் கடந்த 2019ஆம் ஆண்டு நவம்பர் 19ஆம் தேதி சென்னை போதைப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு காவல் துறையினர் நடத்திய திடீர் சோதனையில், அங்கிருந்த இருவரிடமிருந்து, 7 கிலோ எடை அளவுக்கு கஞ்சாவைப் பறிமுதல் செய்தனர்.
இதுதொடர்பான வழக்கில் நைஜீரியா நாட்டைச்சேர்ந்த அயோலுவா டேவிட் அடேபாகின், ஒலுகு ஒலிசேமேகா இம்மானுவேல் ஆகிய இரு கல்லூரி மாணவர்களை கைது செய்தனர்.