தீவிர குற்றவாளிகளின் நடவடிக்கையை கண்காணிப்பதற்கும், சட்ட விரோதமான செயல்களை தடுப்பதற்கும் இரண்டு தீவிர குற்றங்களை தடுக்கும் பிரிவு உருவாக்கப்படும் என சட்டசபையில் தமிழ்நாடு முதல்வர் அறிவித்தார்.
சென்னை போன்ற பெரு நகரங்களில் தீவிர குற்றங்கள் புரியும் A+,A,B,C என பிரிக்கப்பட்ட ரவுடிகளை கண்காணிப்பதற்கு இரண்டு தீவிர குற்றங்களை தடுக்கும் பிரிவு உருவாக்க கடந்த நவம்பர் மாதம் அரசாணை பிறப்பிக்கப்பட்டது.
அந்த அடிப்படையில் சென்னை கூடுதல் ஆணையர் வடக்கு மற்றும் தெற்கு ஆகிய அதிகாரிகளின் கீழ் இரண்டு உதவி ஆணையர்கள் தலைமையில் 54 பேர் கொண்ட இரண்டு தீவிர குற்றங்களை தடுக்கும் பிரிவு உருவாக்கப்பட்டுள்ளது.