தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

வீடியோ: மதுபோதையில் இருவர் உணவக மேலாளர் மீது தாக்குதல்! - Two men attack a hotel manager

சென்னையில் மதுபோதை காரணமாக இருவர் சாலையில் நடந்து சென்ற உணவக மேலாளரை கல்லால் தாக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

மதுபோதையில் இருவர் உணவக மேலாளர் மீது தாக்குதல்
மதுபோதையில் இருவர் உணவக மேலாளர் மீது தாக்குதல்

By

Published : Apr 15, 2022, 10:35 AM IST

சென்னை: அம்பத்தூர் அருகே உள்ள மண்ணூர்பேட்டை பிள்ளையார் கோயில் தெருவைச் சேர்ந்தவர் மகேஷ் கண்ணன் (27). அதே பகுதியில் உள்ள ஒரு உணவகத்தில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். கடந்த ஏப்ரல் 11ஆம் தேதி இரவு பணிமுடித்துவிட்டு வீடுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது மதுபோதையில் வந்த இருவர் அவரிடம் தகராறில் ஈடுபட்டனர். ஒருகட்டத்தில் கீழே கிடந்த கல்லை எடுத்து அவர் மீது தாக்குதல் நடத்தினர்.

இதுகுறித்து அம்பத்தூர் தொழிற்பேட்டை காவல் நிலையத்தில் மகேஷ் கண்ணன் புகார் அளித்தார். அதனடிப்படையில் நடத்தப்பட்ட விசாரணையில் இந்த சம்பவத்தில் ஈடுபட்டது. மண்ணூர்பேட்டை பகுதியைச் சேர்ந்த தினேஷ், மணிகண்டன் என்பது தெரியவந்தது.

மதுபோதையில் இருவர் உணவக மேலாளர் மீது தாக்குதல்

இதையடுத்து அவர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், இருவரும் மகேஷ் கண்ணன் பணிபுரியும் உணவகத்திற்கு மதுபோதையில் சென்றுள்ளனர். உணவு சாப்பிட்டு விட்டு பணம் கொடுக்க மறுத்துள்ளனர். இதனால் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அதனால் அவரை தாக்கியது தெரியவந்துள்ளது.

இதையும் படிங்க:போதையில் தந்தையை இரும்பு ராடால் அடித்துக் கொலை செய்த மகன் கைது

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details