சென்னை ஆதம்பாக்கம் அம்பேத்கார் நகர்,அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக ஆதம்பாக்கம் காவல்துறைக்கு தகவல் வந்தது. தகவலின் அடிப்படையில் காவலர்கள் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது பரங்கிமலை ரயில் நிலையம் அருகே வட மாநிலத்தை சேர்ந்த ஒருவர் சந்தேகத்திற்கிடமாக சுற்றித்திரிந்ததை பார்த்த காவலர்கள் அவரை பிடித்து விசாரிக்கும் போது அவர் டெல்லியை சேர்ந்த ராஜ்குமார் (வயது 30) என்றும், ஆதம்பாக்கம் பகுதிகளில் சுமார் ஆறு மாதங்களாக போதை மாத்திரை, கஞ்சா விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.