சென்னை: இந்திய அரசால் தடை செய்யப்பட்ட ஏமன் நாட்டிற்கு சட்டவிரோதமாக சென்றுவிட்டு,மீண்டும் சாா்ஜா வழியாக இந்தியா திரும்பிய கேரளா,காஞ்சிபுரத்தை சோ்ந்த இருவரை,சென்னை விமானநிலையத்தில் குடியுரிமை அதிகாரிகள் கைது செய்து போலீசில் ஒப்படைத்தனா்.சார்ஜாவில் இருந்து ஏர் அரேபியா ஏா்லைன்ஸ் விமானம் நேற்று காலை சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தது. அந்த விமானத்தில் வந்த பயணிகளிடம் சென்னை விமானநிலைய குடியுரிமை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
ஏமன் நாட்டிலிருந்து சட்டவிரோதமாக வந்த இந்தியர்கள் கைது - chennai international airport
இந்திய அரசால் தடை செய்யப்பட்ட ஏமன் நாட்டிற்கு சட்டவிரோதமாக சென்றுவிட்டு,மீண்டும் சாா்ஜா வழியாக இந்தியா திரும்பிய கேரளா,காஞ்சிபுரத்தை சோ்ந்த இருவர் கைது செய்யப்பட்டனர்.
அப்போது கேரள மாநிலம் கொச்சியை சேர்ந்த சஜன்(50), காஞ்சிபுரம் மாவட்டத்தை சோ்ந்த சூசை ராஜா (52) ஆகியோரின் பாஸ்போர்ட்களை சோதனையிட்டனா்.இருவரும் இந்திய அரசால் தடை செய்யப்பட்ட ஏமன் நாட்டிற்கு சென்று சில மாதங்களுக்கு பின்பு சாா்ஜா வழியாக இந்தியா வந்துள்ளதை கண்டுப்பிடித்தனா்.இதையடுத்து இருவரையும் குடியுரிமை அலுவலக அறையில் அடைத்து வைத்து குடியுரிமை அதிகாரிகள்,கியூ பிரிவு மற்றும் மத்திய உளவு பிரிவு அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தினா்.
இதையும் படிங்க: சென்னை விமான நிலையத்தில் துப்பாக்கி குண்டுகள் பறிமுதல்