சென்னை: தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் நாளை (மார்ச் 31) சென்னையில் உள்ள சிலப்பகுதிகளில் பராமரிப்புப்பணி காரணமாக காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படும் என அறிவித்துள்ளது.
இதுகுறித்து, அக்கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "பெரம்பூர், புழல் துணைமின் நிலையங்களில் கீழ்க்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மதியம் 2 மணிக்குள் பராமரிப்புப்பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும். அதன்படி புழல் பகுதி பத்மாவதி நகர், லட்சுமி நகர், இந்திரா நகர், கிரெஸ் நகர், வி.எம்.கே நகர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்படும்.
நாளை மறுநாள் வெள்ளிக்கிழமை (ஏப். 1) அன்று சென்னையில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்வாரிய பராமரிப்புப்பணி காரணமாக தாம்பரம், அடையாறு - காந்திநகர் , போரூர் , கிண்டி, செம்பியம், தண்டையார்பேட்டை - காலடிப்பேட்டை துணைமின் நிலையங்களில் கீழ் உள்ள இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மதியம் 2 மணிக்குள் பராமரிப்புப்பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும். மின்வெட்டு ஏற்படும் பகுதிகள் குறித்த விவரம்:
தாம்பரம் பகுதி: கடப்பேரி ஆர்.பி ரோடு பகுதி வேல்முருகன் தெரு, சரஸ்வதி நகர் ஈ.டி.எல் காமக்கோடி நகர், எ.ஜி.எஸ் களி, வி.ஜி.பி சாந்தி நகர், சர்ச் அவென்யூ, காந்தி தெரு மற்றும் இதனைச் சுற்றியுள்ள பகுதிகள்.
அடையாறு / காந்திநகர் பகுதி: காமராஜ் அவென்யூ 1 மற்றும் 2 தெரு, கே.பி நகர் 4 , 7, 8 மெயின் ரோடு , இந்திரா நகர் 7 முதல் 15 வரை குறுக்குத்தெரு மற்றும் இதனை சுற்றியுள்ள பகுதிகள்.