தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட காவலர்கள் பணியிடை நீக்கம் - chennai police sell ganja

சென்னையில் கஞ்சா விற்பனை வழக்கில் கைது செய்யப்பட்ட இரண்டு காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

கஞ்சா விற்பனையில் சென்னை காவலர்கள்
கஞ்சா விற்பனையில் சென்னை காவலர்கள்

By

Published : Apr 19, 2022, 9:24 AM IST

சென்னை: அயனாவரத்தில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக கீழ்ப்பாக்கம் தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதனடிப்படையில், தனிப்படை போலீசார் சோதனையிட்ட போது, அயனாவரத்தை சேர்ந்த ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் திலீப் குமாரிடமிருந்து ஒரு கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், இந்த கஞ்சா விற்பனையில், சென்னை சென்ட்ரல் ரயில்வே காவல்துறையில் உதவி ரைட்டராக பணிபுரிந்து வரும் சக்திவேல், சைபர் கிரைம் அலுவலகத்தில் பணியாற்றி வரும் காவலர் செல்வகுமார் இருவருக்கும் தொடர்பிருப்பது தெரியவந்தது. இதன்படி இரண்டு காவர்களும் கைது செய்யப்பட்டனர். இந்த நிலையில், இருவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

இதையும் படிங்க:கஞ்சா விற்பனையில் இறங்கிய காவலர்கள்

ABOUT THE AUTHOR

...view details