தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

சென்னையில் 'ஆல் அவுட்' பெயரில் போலி கொசு ஒழிப்பு மருந்து விற்ற 2 பேர் கைது - பதிப்புரிமை பாதுகாப்பு சட்டம்

சென்னையில் கோயம்பேடு 'ஆல் அவுட்' பெயரில் போலி கொசு ஒழிப்பு மருந்து விற்ற 2 பேரை கைது செய்த போலீசார் Copyrights சட்டம் உட்பட 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

gtes
fe

By

Published : Apr 29, 2022, 10:36 PM IST

சென்னை கோயம்பேடு பகுதியில் ஆல் அவுட் நிறுவன பெயரை பயன்படுத்தி போலியான கொசு மருந்துகள் விற்பனை செய்யப்படுவதாக கோயம்பேடு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதனைத் தடுப்பதற்காக, சுகாதாரத்துறை அலுவலர்களுடன் சென்ற போலீசார் கோயம்பேட்டில் உள்ள உணவு தானிய கிடங்கு வளாகம் மற்றும் கோயம்பேடு மார்க்கெட் பகுதிகளில் உள்ள கடைகளில் தீவிர சோதனை மேற்கொண்டனர்.

சோதனையில் ஆஷாபுரா ஸ்டோர் மற்றும் பெரியார் காய்கறி மார்க்கெட் கடை ஆகிய இடங்களில் 'ஆல் அவுட்' என்ற பெயரில் போலியான கொசு ஒழிப்பு மருந்துகளை விற்பனை செய்து வந்தது கண்டறியப்பட்டது. அந்தக் கடைகளில் இருந்து 130 போலி ஆல் அவுட் மருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டன.

போலியாக 'ஆல் அவுட்' பெயரில் கொசு மருந்து விற்ற இருவர் கைது
போலியான கொசு ஒழிப்பு மருந்துகள் விற்பனை செய்தது குறித்து சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் மேலாளரான சதீஷ்குமார் அளித்த புகாரின் படி, கடையின் உரிமையாளரான சூரஜ் சிங்(35) மற்றும் நெற்குன்றம் பகுதியைச் சேர்ந்த இம்தியாஸ்(34) ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர். இவர்கள் மீது Copyrights சட்டம் உட்பட 2 பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

For All Latest Updates

TAGGED:

Chennai News

ABOUT THE AUTHOR

...view details