சென்னை:சோமங்கலம் அடுத்த புதுதாங்கலை சேர்ந்த வெங்கடேசன் (47) தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவர் இருசக்கர வாகனத்தில் சோமங்கலத்தில் இருந்து தாம்பரம் நோக்கி கிஷ்கிந்தா சாலை வழியாக சென்று கொண்டிருந்தார். அப்போது வசந்தம் நகர் மதுபானக்கடை அருகே அடையாளம் தெரியாத ஆறு பேர் வெங்கடேசனை வழிமறித்து கத்தியை காட்டி பணம் கேட்டு மிரட்டியுள்ளனர்.
இதனால் வெங்கடேசன் அங்கிருந்து தப்பியோட முயற்சித்துள்ளார். அப்போது அறு பேரும் அவரை மடக்கிப் பிடித்து கழுத்தில் கத்தியை வைத்து 1,500 ரூபாய் பணம், விலை உயர்ந்த செல்போன், இருசக்கர வாகனம் ஆகியவற்றை பறித்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர். இதுகுறித்து வெங்கடேசன் தாம்பரம் காவல் நிலைய குற்றப்பிரிவு ஆய்வாளரிடம் புகார் அளித்துள்ளார்.