தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jun 14, 2022, 9:05 PM IST

ETV Bharat / city

'தசாவதாரம்' பட பாணியில் பட்டினப்பாக்கம் கடற்கரையில் கரை ஒதுங்கிய கற்சிலைகள் மீட்பு!

சென்னை பட்டினப்பாக்கம் கடற்கரையிலிருந்து இன்று(ஜூன்.14) இரண்டு கற்சிலைகள் காவல் துறையினரால் மீட்கப்பட்டன.

பட்டினப்பாக்கம் கடற்கரையில் கிடந்த இரண்டு கற்சிலைகள் மீட்பு
பட்டினப்பாக்கம் கடற்கரையில் கிடந்த இரண்டு கற்சிலைகள் மீட்பு

சென்னை பட்டினப்பாக்கம் சீனிவாசபுரம் கடற்கரையில் இன்று(ஜூன்.14) காலை சுமார் 8.30 மணியளவில் காவல் துறையினர் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு விளையாடிக்கொண்டிருந்த சிறுவர்கள் 2 சிலைகள் கரை ஒதுங்கியுள்ளது என காவல் துறையினரிடம் தகவல் கூறியுள்ளனர்.

இதனையடுத்து காவல் துறையினர் கரை ஒதுங்கிய இரு சிலைகளை மீட்டு பட்டினம்பாக்கம் காவல் நிலையத்திற்கு கொண்டு வந்தனர். விசாரணையில் பஞ்சமுக ஆஞ்சநேயர் சிலை, நாயன்மார் ஆகிய இரண்டு கற்சிலைகள் என்பது தெரியவந்தது. பறிமுதல் செய்யப்பட்ட சிலைகள் வட்டாட்சியரிடம் ஒப்படைக்கப்பட்டது.

'தசாவதாரம்' பட பாணியில் பட்டினப்பாக்கம் கடற்கரையில் கரை ஒதுங்கிய கற்சிலைகள் மீட்பு!

இந்த சிலைகள் எந்த கோயிலிலிருந்து திருடப்பட்டவை? இவற்றை வீசிச்சென்றவர்கள் யார் என்ற கோணத்தில் பட்டினப்பாக்கம் காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரி விசாரணை நடத்தி வருகிறார். இதுதொடர்பாக அறநிலையத்துறைக்கும், தொல்லியல் துறைக்கும் தகவல் தெரிவிக்கப்படும் என்றும்; அவர்கள் வந்து பார்வையிட்டு எந்த காலத்தைச் சார்ந்த சிலைகள் என கண்டறிவார்கள் என வட்டாட்சியர் தகவல் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க:மழைநீர் வடிகால் திட்டப்பணிகளில் தொய்வு ஏற்படுத்தியவர்களுக்கு ரூ.75,000 அபராதம் - சென்னை மாநகராட்சி

ABOUT THE AUTHOR

...view details