தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

போதைப்பொருள் விற்பனை - இருவர் கைது - கோடம்பாக்கம் காவல் துறை

கோடம்பாக்கத்தில் போதைப்பொருள் விற்பனை செய்தவர் உள்பட இருவரை காவல் துறையினர் கைது செய்தனர்.

போதைப்பொருள் விற்பனை
போதைப்பொருள் விற்பனை

By

Published : Sep 21, 2021, 9:35 PM IST

சென்னை: கோடம்பக்கம் பகுதியில் சட்டவிரோதமாக போதைப்பொருள் விற்பனை நடப்பதாக கீழ்ப்பாக்கம் துணை ஆணையருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இத்தகவலின் பேரில் கோடம்பாக்கம், அதனை சுற்றியுள்ள பகுதிகளில் சேத்துபட்டு காவல் துறையினர், தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.

போதைப்பொருளுடன் கைது

அப்போது அங்கு சந்தேகத்திற்கு இடமான முறையில் நின்றிருந்த ஒருவரை பிடித்து சோதனை செய்தனர். சோதனையில் அவரிடம் போதைப்பொருள் இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து அவரிடம் நடத்திய விசாரணையில், அவர் காசிமேடு பகுதியைச் சேர்ந்த அகமது (26) எனத் தெரியவந்தது. தொடர்ந்து அவரை காவல்துறையினர் கைது செய்தனர்.

சப்ளையரும் கைது

அவரிடம் மேற்கொண்ட விசாரணையில் அவர் பாடியநல்லூரைச் சேர்ந்த சிவகுமார் (49) என்பவரிடம் போதைப்பொருளை வங்கியதை ஒப்புக்கொண்டார்.

இதையடுத்து, ரெடில்ஸ் பகுதியில் பதுங்கியிருந்த சிவக்குமரை காவல் துறையினர் கைது செய்து, அவரிடமிருந்து 600 கிராம் மெத்தோ கட்டமைன் (METHO KETAMINE) என்னும் போதைப்பொருள், கார் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து, இருவரிடமும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: போதைப்பொருள் பயன்பாட்டைத் தடுக்க விழிப்புணர்வு நிகழ்ச்சி

ABOUT THE AUTHOR

...view details