சட்டப்பேரவையில் இன்று காட்டுமன்னார் கோயில் உறுப்பினர் முருகு மாறன் கேள்விக்கு பதிலளித்த மின்துறை அமைச்சர் தங்கமணி, ”திமுக ஆட்சியை காட்டிலும் அதிமுக ஆட்சியில் துணை மின் நிலையங்கள் இருமடங்காக அதிகரிக்கப்பட்டுள்ளன. மின் பளு அதிகமுள்ள பகுதிகளில் உடனடியாக துணை மின்நிலையம் அமைத்துத் தர முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். தேவையை கருத்தில் கொண்டு பாளையங்கோட்டையில் 110 kv துணை மின்நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
திமுக ஆட்சியை விட அதிமுக ஆட்சியில் இருமடங்கு துணை மின்நிலையங்கள்! - திமுக ஆட்சி
சென்னை: திமுக ஆட்சியை காட்டிலும் அதிமுக ஆட்சியில் துணை மின் நிலையங்கள் இருமடங்காக அதிகரிக்கப்பட்டுள்ளதாக மின்துறை அமைச்சர் தங்கமணி கூறியுள்ளார்.
thangamani
2017 முதல் தற்போது வரை 21 துணை மின் நிலையங்கள் கடலூர் மாவட்டத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ளன. சென்னையில் இயற்கை சீற்றங்களால் பழுதடைந்த மின்மாற்றிகள் 90% மாற்றப்பட்டுள்ளன” என்றார்.
இதையும் படிங்க: ‘எழுவர் விடுதலை குறித்து பிரதமர் அறிவிப்பார்’ - அமைச்சர் பாண்டியராஜன்