தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

2 வாரங்களில் தமிழ்நாட்டில் தணிக்கையில் ரூ.24.50 கோடி வசூல் - சென்னை செய்திகள்

கடந்த இரு வாரங்களில் தமிழ்நாட்டில் தணிக்கை மேற்கொள்ளப்பட்ட இனங்களின் எண்ணிக்கை 996 மற்றும் ரூ.24.50 கோடி வசூல் செய்யப்பட்டுள்ளதாக வணிகவரி மற்றும் பதிவுத் துறை தகவல் தெரிவித்துள்ளது.

வணிகவரி
வணிகவரி

By

Published : Jan 31, 2022, 10:46 PM IST

சென்னை: தமிழ்நாடு வணிகவரி மற்றும் பதிவுத் துறை சார்பில் இன்று (ஜனவரி 31) செய்திக் குறிப்பு ஒன்றை வெளியிடப்பட்டது. அதில் பின்வருமாறு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசால் ஜூலை 2017 முதல் சரக்குகள் மற்றும் சேவைகள் வரிச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு நடைமுறையில் உள்ளது. அதன்மூலம் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு நலத்திட்டங்களைத் தமிழ்நாடு அரசு செயல்படுத்துவதில் சரக்குகள் மற்றும் சேவைகள் வரி மூலம் பெறப்படும் வரி வசூலானது முக்கியப் பங்கு வகிக்கிறது.

வணிகவரித் துறையின் புலனாய்வு சார்ந்த நடவடிக்கைகளை வலுவாக்குவது, நுண்ணறிவுப் பிரிவுகள் மூலம் சரக்குகள் மற்றும் சேவைகள் வரி மீதான தணிக்கை பணியினை திறம்பட மேற்கொள்வது போன்ற பல புதிய முயற்சிகள் துறையால் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.

இதன்படி 03.01.2022 முதல் 16.01.2022 வரையில் கடந்த இரு வாரங்களில் தமிழ்நாட்டில் தணிக்கை மேற்கொள்ளப்பட்ட இனங்களின் எண்ணிக்கை 996 மற்றும் ரூ.24.50 கோடி வசூல் செய்யப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:வார்டு பங்கீட்டில் முரண்பாடு: ஜோதிமணி வெளியேறியது குறித்து செந்தில்பாலாஜி விளக்கம்

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details