தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள குடிநீர் வடிகால் ஊழியர்கள்! - Chennai District News

சென்னை: குடிநீர் வடிகால் வாரிய ஊழியர்கள் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

குடிநீர் வடிகால் வாரிய ஊழியர்கள்
குடிநீர் வடிகால் வாரிய ஊழியர்கள்

By

Published : Feb 5, 2021, 4:24 PM IST

தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய ஊழியர்கள் மூன்றாவது நாளாக இன்று (பிப்.4) காத்திருப்புப் போராட்டத்தைத் தொடர்ந்தனர். குடிநீர் வடிகால் வாரிய சங்கத்தின் பிரதிநிதிகள் அரசு அதிகாரிகளை சந்தித்து தொடர்ந்து பேச்சு வார்த்தையில் ஈடுபட்டுள்ளனர். இதனால், அரசு இவர்களின் கோரிக்கைகளை ஏற்று கொண்டு அரசாணையை பிறப்பிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதுகுறித்து சங்க பிரதிநிதி ஒருவர் கூறுகையில், “நேற்று முன்தினம் (பிப். 3) மாலையிலுருந்து பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது. இன்று அல்லது நாளை அரசாணை இயற்றப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம்” என்றார்.

ஓய்வூதியம், பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி வாரிய சங்க ஊழியர்கள் கடந்த மூன்று நாள்களைக் கடந்து சென்னை எழிலகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details