தனியார் மருத்துவக்கல்லூரிகளில் சேரும் அரசுப்பள்ளி மாணவர்களின் செலவை அரசே ஏற்கும் என்பதை தாமதமாக அறிவித்ததால் பாதிக்கப்பட்ட இரண்டு மாணவிகளுடன், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை இன்று தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் சந்தித்து பேசினார். இதையடுத்து இவ்விவகாரம் தொடர்பாக முதலமைச்சருக்கு ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வேல்முருகன், ” அரசுப் பள்ளி மாணவர்கள் மருத்துவக்கல்வி பயில ஏதுவாக 7.5% இடஒதுக்கீடு அறிவித்து நடைமுறையில் உள்ளது. அதன்படி, அதற்கான கலந்தாய்வு 18, 19 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து ஏழை மாணவர்களுக்கான கல்வி மற்றும் விடுதி கட்டணத்தை அரசே ஏற்கும் என்று அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், தர்ஷினி, இலக்கியா என்ற இரு மாணவிகளுக்கு கட்-ஆஃப் படி தனியார் கல்லூரியில் இடம் கிடைத்துள்ளது. ஆனால், ரூ.5 லட்சத்திற்கும் மேல் கட்டணம் என்றதால், அவர்கள் அவகாசம் கேட்டுள்ளனர். ஆனால், அதனை ஏற்காததால், அம்மாணவிகளுக்கு அக்கல்லூரிகளில் இடம் கிடைக்காமல் போயுள்ளது.