தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

அனைவருக்கும் கல்விக் கட்டணம் இலவசம்.. முதலமைச்சர் அதிரடி... - Tuition is free in Kabaliswarar College of Arts and Sciences

அறநிலையத் துறையின் கீழ் செயல்படும் கலை, அறிவியல் கல்லூரிகளில் சேரும் அனைவருக்கும் கல்விக் கட்டணம் இலவசம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்

By

Published : Nov 3, 2021, 3:54 PM IST

சென்னை கொளத்தூரில் அறநிலையத் துறையின் கீழ் செயல்பட உள்ள கபாலீஸ்வரர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்று(நவ.2) திறந்து வைத்தார். அப்போது, உயர்கல்வித் துறை அமைச்சர் க. பொன்முடி, இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு உடனிருந்தனர்.

இதையடுத்து, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், இந்தக் கல்லூரியில் இந்தாண்டு சேரும் மாணவர்கள் அனைவருக்கும் கல்விக் கட்டணம், உபகரணங்கள் இலவசமாக வழங்கப்படும் என்று தெரிவித்தார். இதேபோல, நாமக்கல், திண்டுக்கல், தூத்துக்குடி மாவட்டங்களிலும் கல்லூரிகள் திறக்கப்பட உள்ளன.

இக்கல்லூரிகளிலும் கல்விக்கட்டணம் செலுத்த வேண்டி இருக்காது எனக் கூறப்படுகிறது. முன்னதாக, அறநிலையத்துறையின் மானியக் கோரிக்கையில், இந்தத்துறை சார்பில் 10 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:ரூ.6 ஆயிரம் கோடி மதிப்பிலான நகைக்கடன்கள் தள்ளுபடி - அரசாணை வெளியீடு

ABOUT THE AUTHOR

...view details