தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

'அரசுக்கு அச்சாணியாக இருப்பவர்கள் தலையிலேயே நிதி நெருக்கடியை சுமத்துவதா?' - அரசு ஊழியர்கள்

சென்னை: அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள் ஆகியோருக்கான அகவிலைப்படி உயர்வு, ஈட்டிய விடுப்பு ஆகியவற்றை நிறுத்திவைத்திருப்பது ஏற்புடையதல்ல என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

dinakaran
dinakaran

By

Published : Apr 28, 2020, 2:11 PM IST

இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பதிவில், “நெருக்கடியான நேரத்தில் களத்தில் நின்று அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றிவரும் சுகாதாரம், உள்ளாட்சி, வருவாய், கூட்டுறவுத் துறை ஊழியர்கள் உள்ளிட்ட அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள் ஆகியோருக்கான அகவிலைப்படி உயர்வு, ஈட்டிய விடுப்பு ஆகியவற்றை நிறுத்திவைத்திருப்பது ஏற்புடையதல்ல.

மேலும், இவர்களின் வருங்கால வைப்புநிதிக்கு வழங்கப்படும் வட்டியைக் குறைத்திருப்பதும் சரியானதல்ல. தங்கள் பிள்ளைகளின் கல்வி, திருமணம் போன்றவற்றிக்காக இந்தப் பணத்தை நம்பியிருக்கும் ஊழியர்கள், அரசின் முடிவால் பாதிக்கப்படுவார்கள்.

தமிழ்நாடு அரசு கஜானாவிலிருந்து தேவையற்ற முறையில் செல்லும் எத்தனையோ செலவினங்களைக் கட்டுப்படுத்துவதை விட்டுவிட்டு, அரசு எந்திரத்திற்கு அச்சாணியாக இருப்பவர்கள் தலையிலேயே நிதி நெருக்கடியைச் சுமத்துவது எப்படிச் சரியாக இருக்க முடியும்? “ எனக் குறிப்பிட்டுள்ளார்.

அரசுக்கு அச்சாணியாக இருப்பவர்கள் தலையிலேயே நிதி நெருக்கடியை சுமத்துவதா? - டிடிவி தினகரன்

இதையும் படிங்க: மக்கள் ஒத்துழைப்பு அளித்தால் கரோனா ஒழிப்பில் விரைவில் வெற்றி - ராமதாஸ்

ABOUT THE AUTHOR

...view details