தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

'நீட் தேர்வில் இருந்து மாணவர்களைக் காப்பாற்ற திமுக, அதிமுக உண்மையாக முயற்சிக்க வேண்டும்' - நீட் தேர்வில் இருந்து மாணவர்களைக் காப்பாற்ற திமுக, அதிமுக உண்மையாக முயற்சிக்க வேண்டும்

சென்னை: மக்களை ஏமாற்ற நினைப்பதை விடுத்து, நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டு மாணவர்களைக் காப்பாற்ற அதிக எம்.பி.க்களை வைத்திருக்கும் திமுகவும், அதிகாரத்திலுள்ள அதிமுக அரசும் உண்மையாக முயற்சிக்க வேண்டும் என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

ttv
ttv

By

Published : Sep 10, 2020, 6:35 PM IST

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் ட்விட்டர் பதிவில் கூறியுள்ளதாவது; 'நீட் தேர்வு அச்சம் காரணமாக, தமிழ்நாட்டில் மாணவர்கள் அடுத்தடுத்து தற்கொலை செய்து கொள்வது பெரும் துயரத்தையும், மனவேதனையையும் ஏற்படுத்துகிறது.

நீட் தேர்வு வருவதற்குக் காரணமாக இருந்த தீய சக்தியான திமுகவும், அதனைச் செயல்படுத்திய தமிழ்நாடு அரசும் ஒருவர் மீது ஒருவர் குற்றஞ்சாட்டுவது போல நாடகம் ஆடுகிறார்களே தவிர, நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறுவதற்குத் தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்க மறுப்பதால்தான் இந்த சோகம் தொடர்கிறது.

இனியாவது, மக்களை ஏமாற்ற நினைப்பதை விட்டுவிட்டு நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டு மாணவர்களைக் காப்பாற்ற அதிக மக்களவை உறுப்பினர்களை வைத்திருக்கும் திமுகவும், அதிகாரத்திலுள்ள அதிமுக அரசும் உண்மையாக முயற்சிக்க வேண்டும். அதே நேரத்தில், உயிரை விடுவது எதற்கும் தீர்வாக அமையாது.

எல்லாவற்றையும் எதிர்கொண்டு, வைராக்கியத்தோடு போராடி வாழ்வில் வென்று காட்ட வேண்டுமே தவிர, உயிரை மாய்த்துக் கொள்ளும் எண்ணத்திற்கே மாணவர்கள் செல்லக்கூடாது' என அதில் கூறியுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details