சசிகலாவின் விசுவாசியாக டிடிவி தினகரனின் தளபதியாக விளங்கியவர் தங்க தமிழ்ச்செல்வன். அவர் திமுகவில் இணைந்தது அமமுகவை உலுக்கிவிட்டது என்றே கூறலாம். தங்க தமிழ்ச்செல்வன் திமுகவில் இணைவதற்கு முன் அவர் பேசும் ஆடியோ பதிவு ஒன்று வெளியானது. அதில் அவர் தினகரன் மீது அதிருப்தியில் இருக்கிறார் என்பதையும், கட்சி மாறவுள்ளார் என்பதையும் தெளிவு படுத்தியிருந்தது.
அதே போன்று அந்த ஆடியோ வெளியான இரண்டே நாளில் தங்க தமிழ்ச்செல்வன் அண்ணா அறிவாலயத்தில் தஞ்சமடைந்தார். பின்னர் திமுகவில் இணைந்த அவருக்கு கட்சி பொறுப்புகள் வழங்கப்பட்டது. மேலும் ஆண்டிபட்டியில் நடைபெற்ற பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் முன்னிலையில், தங்க தமிழ்ச்செல்வனின் ஆதரவாளர்கள் அமமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்தனர். அது மட்டுமல்லாது தங்க தமிழ்ச்செல்வன் டிடிவி தினகரனை கடுமையாக விமர்சனமும் செய்தார். இந்த நிகழ்வு கட்சி ரீதியாக டிடிவி தினகரனுக்கு பல நெருக்கடிளை உண்டாக்கியதோடு அவரது அரசியல் வாழ்வில் திடீர் சறுக்கலாகவே பார்க்கப்பட்டது.
தங்க தமிழ்ச்செல்வனைப் போலவே சசிகலாவின் விசுவாசியாகவும் டிடிவி தினகரனின் தீவிர ஆதரவாளராகவும் உள்ளவர் புகழேந்தி. ஆனால் அவரும் கட்சி தாவிய அமமுக பிரமுகர்களின் பட்டியலில் சேர அதிக வாய்ப்பிருக்கிறது என்பதை உணர்த்தும் விதமாக ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது.