தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

டெல்லி விரைந்த டிடிவி! - sasikala release

சென்னையிலிருந்து திடீரென டெல்லி புறப்பட்டு சென்றார் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன். சசிகலா விடுதலை குறித்து வழக்கறிஞர்களுடன் விவாதிக்க தனி விமானத்தில் புறப்பட்டுச் சென்றுள்ளார்.

டிடிவி
டிடிவி

By

Published : Sep 20, 2020, 4:23 PM IST

சென்னை: சசிகலா விடுதலை குறித்து வழக்கறிஞர்களுடன் விவாதிக்க தனி விமானத்தில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் டெல்லி சென்றுள்ளார்.

சொத்து குவிப்பு வழக்கில் சிறையிலுள்ளசசிகலாவின் தண்டனை காலம் விரைவில் முடிவுக்கு வரவுள்ளது. இச்சூழலில் அவர் கட்ட வேண்டிய அபராத தொகையான ரூ.10 கோடியை நீதிமன்றத்தில் செலுத்தினால், அவர் விரைவில் வெளியே வருவார் என்று கூறப்படுகின்றது.

அண்மையில் ஆர்.டி.ஐ மூலம் பெங்களூரைச் சேர்ந்த ஒருவர் கேட்ட தகவலின்படி, 2021ஆம் ஆண்டின், ஜனவரி 27ஆம் தேதி சசிகலாதண்டனை காலம் நிறைவு பெறுகின்றது என்ற தகவல் கிடைத்திருந்தது. இத்தருணத்தில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இன்று காலை 9:45 மணியளவில், தனி விமானத்தில் டெல்லிக்கு பயணம் செய்துள்ளார்.

ஆறு பேர் மட்டுமே பயணிக்க கூடிய அந்த விமானத்தில் அவருடன் அவரது நண்பர் மல்லிகார்ஜூன், தனிச் செயலாளர் ஜனா என மூன்று பேர் மட்டும் சென்றுள்ளனர் என்று தகவல்கள் கிடைத்துள்ளது.

ABOUT THE AUTHOR

...view details