மாற்றுத்திறனாளிகள் தினத்திற்கு வாழ்த்து தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ள அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், “கடவுளின் குழந்தைகளான மாற்றுத்திறனாளிகள் அனைவருக்கும் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
வாழ்நாள் முழுவதும் மாற்றுத்திறனாளிகளை நேசித்துக் கொண்டாடிய ஜெயலலிதாவின் பெயரைத் தாங்கியிருக்கிறது அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம்.
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அறிக்கை மாற்றுத்திறனாளிகளுக்கான அரசியல் அங்கீகாரமாக, அவர்களுக்கென்று அமமுக கட்சியில் தனியாக “மாற்றுத்திறனாளிகள் நலப்பிரிவு” உருவாக்கப்படுகிறது. வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த அறிவிப்பினை சிறப்புக்குரிய இந்த நாளில் வெளியிடுவதில் பெரும் மகிழ்ச்சியடைகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க...தீயசக்தி கூட்டத்தைத் திரும்பவும் தலையெடுக்கவிடாமல் தடுக்க உறுதி ஏற்போம் - டிடிவி சூளுரை