தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

’மண்ணுக்குச் சொந்தமானவர்களை வீதியில் நிறுத்தி விட்டனர்’ - டிடிவி தினகரன் ட்வீட் - திமுக குறித்து டிடிவி தினகரன் ட்வீட்

நகர வளர்ச்சி திட்டத்துக்காக அரும்பாக்கத்தில் உள்ள மக்களை அரசு அப்புறப்படுத்திய நிலையில், அமமுக பொதுசெயலாளர் டிடிவி தினகரன் இதுகுறித்து ட்வீட் செய்துள்ளார்.

TTV Dhinakaran tweet
TTV Dhinakaran tweet

By

Published : Aug 1, 2021, 1:04 PM IST

சென்னை: அரும்பாக்கம் ராதாகிருஷ்ணன் நகரில் பல ஆண்டுகளாய் குடியிருந்த மக்கள், நகர வளர்ச்சித் திட்டப் பணிகள் காரணமாக அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர்.

இச்செயலை கண்டித்து பல அரசியல் கட்சித் தலைவர்களும் சமூக வலைதளங்கள் வாயிலாக தங்கள் எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர். இதற்கிடையில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இதுகுறித்து ட்வீட் செய்துள்ளார்.

அதில், "மாநகரங்களை அழகுபடுத்துவதாகக் கூறி தலைமுறை, தலைமுறையாக அங்கே வசிப்பவர்களுக்கு மாற்று இடம் ஒதுக்காமல், கண்மூடித்தனமான நடவடிக்கைகள் மூலம் அவர்களை வெளியேற்றும் திமுக அரசுக்கு கடும் கண்டனங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

சென்னை, அரும்பாக்கம் ராதாகிருஷ்ணன் நகரில் ஆரம்பித்திருக்கிற இந்த அதிகார அத்துமீறல் எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது. திமுக ஆட்சிக்கு வந்தாலே தங்களை வளப்படுத்திக் கொள்ள சென்னையைச் சிங்காரிக்கிறோம், கூவத்தை தூய்மைப்படுத்துகிறோம் என்று கிளம்பிவிடுவார்கள்.

இந்த மண்ணுக்குச் சொந்தமானவர்களை வீதியில் நிறுத்தி விட்டு யாருக்காக இவர்கள் செயற்கை அழகை ஏற்படுத்த நினைக்கிறார்கள்? தமிழ்நாட்டில் இனி வேறெங்கும் இதுபோல் நடக்கக்கூடாது. சென்னையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நீதி வழங்க வேண்டும் என்று முதலமைச்சரை வலியுறுத்துகிறேன்" எனப் பதிவிட்டுள்ளார்.

இதையும் படிங்க:கேரளாவில் இருந்து வருபவர்களுக்கு கரோனா சான்று கட்டாயம் -அமைச்சர் மா.சுப்பிரமணியன்

ABOUT THE AUTHOR

...view details