தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

‘பெண்ணுரிமையைப் பாதுகாக்க பாடுபட்டவர் தந்தை பெரியார்’ - டிடிவி தினகரன் - தந்தை பெரியார் செய்திகள்

சென்னை: பெண்ணுரிமையைப் போற்றிப் பாதுகாப்பதற்காக வாழ்நாளெல்லாம் பாடுபட்டவர் தந்தை பெரியார் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் ட்வீட் செய்துள்ளார்.

‘பெண்ணுரிமையை பாதுகாக்க பாடுபட்டவர் தந்தை பெரியார்’ -டிடிவி தினகரன் ட்வீட்!
‘பெண்ணுரிமையை பாதுகாக்க பாடுபட்டவர் தந்தை பெரியார்’ -டிடிவி தினகரன் ட்வீட்!

By

Published : Dec 24, 2020, 10:47 AM IST

பகுத்தறிவுப் பகலவன் எனப் போற்றப்படும் பெரியாரின் 47ஆவது நினைவுநாள் இன்று (டிச. 24) அனுசரிக்கப்படுகிறது.

இதையொட்டி, ட்வீட் செய்துள்ள அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், “'மானமும் அறிவும் மனிதர்க்கு அழகு' என்று சொன்ன தந்தை பெரியார் அவர்களின் நினைவு நாள் இன்று! சாதி, மத பேதமற்ற சமத்துவ சமுதாயம் அமைவதற்கும், பெண்ணுரிமையைப் போற்றிப் பாதுகாப்பதற்காகவும் வாழ்நாளெல்லாம் பாடுபட்டவர் தந்தை பெரியார்.

டிடிவி தினகரன் ட்வீட்

அவர்களின் வழியில் சமூகநீதியைக் காத்து நின்று, ஏற்றத்தாழ்வு இல்லாத தமிழ்நாட்டை உருவாக்க இந்நாளில் உறுதி ஏற்றிடுவோம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க...குளத்தின் சுற்றுச்சுவரைச் சீரமைக்க ரூ.7.99 கோடி நிதி ஒதுக்கீடு - முதலமைச்சர் பழனிசாமி

ABOUT THE AUTHOR

...view details