சென்னை: செங்கல்பட்டு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் இன்று (மே 5) அதிகாலை 11 கரோனா நோயாளிகள் உயிரிழந்த சம்பவம் தமிழ்நாட்டில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது டிவிட்டர் பக்கத்தில்:
"செங்கல்பட்டு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளிகள் 11 பேர் ஆக்ஸிஜன் தட்டுப்பாட்டால் உயிரிழந்திருப்பதாக வெளிவந்த செய்திகள் பெரும் அதிர்ச்சியையும் வேதனையையும் தருகின்றன. இதில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு தமிழ்நாடு அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். தமிழ்நாட்டில் எந்த மருத்துவமனையிலும் இப்படி ஒரு நிகழ்வு இனி நடக்காதவாறு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். மாநிலம் முழுவதும் கரோனா தடுப்பு, மருத்துவ சிகிச்சை பணிகளில் ஒருங்கிணைந்த செயல்பாட்டிற்கான தேவையை தமிழ்நாடு அரசு நிர்வாகம் இதன் பிறகாவது உணர்ந்து செயல்பட வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.