சொத்துக் குவிப்பு வழக்கில் சிறை தண்டனை விதிக்கப்பட்டு 4 ஆண்டுகள் பெங்களூரு - பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் இருந்த சசிகலா சென்ற 27ஆம் தேதி விடுதலை செய்யப்பட்டார். அதற்கு முன்னதாக, ஜனவரி 20ஆம் தேதி பெங்களூரு விக்டோரியா அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சசிகலா 11 நாள்கள் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில், கடந்த ஜனவரி 31ஆம் தேதி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட சசிகலாவை வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். இதனால், மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட சசிகலா பெங்களூரு புறநகர் பகுதியில் உள்ள தேவனஹல்லி அருகே ஒரு பண்ணை வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார். இந்நிலையில், வருகிற 7ஆம் தேதி சசிகலா தமிழ்நாடு திரும்புவார் என்றும் கூறப்பட்டது.