அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் சசிகலாவைச் சந்தித்து ஆலோசனை நடத்தினார். பின் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர்,
"நேற்று முன்தினம் (மார்ச் 3) நடந்த நிகழ்வுகளைப் பற்றி பேசவில்லை, சசிகலாவிடம் பேசவில்லை, சொந்த விஷயமாகத் தான் பேசினேன்.

அமமுக வெற்றி நிச்சயம்
8, 9 நேர்காணல் என்பதால் 7ஆம் தேதி வரை விருப்ப மனு பெறப்படும். தமிழ்நாட்டு மக்களின் ஆதரவோடு அமமுக நிச்சயம் வெற்றிபெறும் என்ற நம்பிக்கை உள்ளது.
'மிரட்டல்களுக்கு அஞ்ச மாட்டேன்'
கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. ஓரிரு நாள்களில் முடிவு தெரியும்" என்று கூறினார். அமமுக-அதிமுக இணைப்பு நடைபெறுமா என்ற கேள்விக்கு, யூகங்களுக்கு பதிலளிக்க முடியாது என்று தெரிவித்த அவர் 'என்னை யாரும் மிரட்ட முடியாது; மிரட்டல்களுக்கு நான் அஞ்ச மாட்டேன்' என தினகரன் கூறினார்.