தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

சென்னை ஐஐடிக்கு பிரெஸ்டீஜ் தலைவர் ரூ.10 கோடி நன்கொடை! - டிடி ஜெகநாதன்

சென்னை ஐஐடி கல்வி நிறுவனத்துக்கு டிடிகே பிரெஸ்டீஜ் தலைவர் ரூ.10 கோடி நன்கொடை அளித்துள்ளார்.

TT Jagannathan
TT Jagannathan

By

Published : Aug 6, 2021, 10:38 PM IST

சென்னை: டிடிகே பிரெஸ்டீஜின் தலைவர் திரு. டிடி. ஜெகநாதன், ஐஐடி சென்னை ஐஐடிக்கு ரூ.10 கோடி நன்கொடை வழங்கினார்.

டிடிகே ஜெகநாதன் 1970களில் சென்னை ஐஐடி கல்வி நிறுவனத்தில் கல்வி பயின்றார். அதன்பின்னர் தனது குடும்ப வணிக நிறுவனமான டிடிகே குழுமத்தை கவனித்துவந்தார்.

முன்னதாக மெட்ராஸ் ஐஐடி ஜெகநாதனின் சாதனைகளை அங்கீகரிக்கும் வகையிலும், வணிக உலகில் அவர் செய்த பங்களிப்புகளை நினைவுகூரும் வகையில் அரங்கம் ஒன்றுக்கு அவரின் பெயரிடப்படுவதாக அறிவித்திருந்தது.

இந்த அரங்கம் சென்னை ஐஐடி இயக்குனர் பேராசிரியர் பாஸ்கர் ராமமூர்த்தி முன்னிலையில் இன்று (ஆக.6) டிடி ஜெகநாதனால் திறக்கப்பட்டது.

டிடி ஜெகநாதன் ஆடிட்டோரியம் திறப்பு

இந்த விழாவில், பேராசிரியர் மகேஷ் பஞ்சாக்னுலா, பேராசிரியர் ரவீந்திர கெட், சென்னை ஐஐடி தலைமை நிர்வாக அலுவலர் காவிராஜ் நாயர், ஸ்ரீ ஜோசப் தாமஸ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

விழாவில் ஜெகநாதன் பேசுகையில், “சென்னை ஐஐடி மீது எனக்கு மிகுந்த மதிப்பு உண்டு. சென்னை ஐஐடி ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்புகளின் மையமாக திகழ்கிறது. அதன் ஆராய்ச்சியைத் தொடர உதவும் வகையில் சிறிய அளவில் பங்களிப்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.

இந்த நன்கொடை மெட்ராஸ் ஐஐடி எனக்கு கொடுத்த அனைத்திற்கும் திருப்பிச் செலுத்துவதற்கான ஒரு சிறிய வழியாகும். எனது பெயரை ஆடிட்டோரியத்திற்கு சூட்டியதற்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். நான் தாழ்மையுடனும் நன்றியுடனும் உணர்கிறேன்” என்றார்.

சென்னை ஐஐடிக்கு பிரெஸ்டீஜ் தலைவர் ரூ.10 கோடி நன்கொடை

டிடி ஜெகநாதன் சென்னை ஐஐடியில் 1996இல், ‘சிறப்பான முன்னாள் மாணவர் விருது’ பெற்றார் என்பது நினைவு கூரத்தக்கது.

இதையும் படிங்க : உள்ளங்கையில் கீழடி - மெட்ராஸ் ஐஐடி!

ABOUT THE AUTHOR

...view details