திருச்சி:கோடை வெப்பம் அதிகரித்துள்ள நிலையில், திருச்சியில் கடந்த இரண்டு வாரங்களாகவே வெப்பம் அதிகரித்துக் காணப்படுகிறது. இது மட்டுமின்றி அனல் காற்று வீசுவதால் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் பெரும் சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர்.
இந்நிலையில் மக்கள் அதிகம் கூடும் பொது இடங்களில் அரசியல் கட்சியினர் மற்றும் தனியார் அமைப்பினர் சார்பில் நீர் பந்தல்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இதன் ஒருபகுதியாகத் திருச்சி மத்திய பேருந்து நிலையம் பகுதியில் போக்குவரத்து காவல்துறையினர் மற்றும் ஷேர் ஆட்டோ உரிமையாளர்கள், ஓட்டுநர்கள் சார்பில் நீர் மோர் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. எப்பொழுதும் பரபரப்பாகக் காட்சி அளிக்கக்கூடிய பேருந்து நிலையத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர்.
தற்போது கோடை வெப்பம் அதிகரித்து உள்ள நிலையில் பொதுமக்களுக்கும் பேருந்து பயணிகளுக்கும் கோடை வெப்பத்திலிருந்து தப்பிக்க மோர் மற்றும் குளிர்பானம் வழங்கப்படுகிறது. பயணிகளை ஏற்றிச்செல்லும் ஆட்டோ ஓட்டுநர்கள் மற்றும் போக்குவரத்தைச் சீர் செய்யும் போக்குவரத்துக்காவலர்கள் பொதுமக்களின் நலனில் அக்கறை செலுத்தி, இந்த நீர்மோர் பந்தல் அமைத்து இருப்பது பொது மக்களுக்குப் பெரிதும் பயனுள்ளதாக இருப்பதாக அப்பகுதியினர் தெரிவித்தனர்.
திருச்சியில் தக தக தண்ணீர் மோர் பந்தல்!- ஆட்டோ ஓட்டுநர்கள் அற்புதம்! கோடை வெப்ப தாக்கத்தில் சமாளிக்க இந்த நீர் மோர் பந்தல் வைத்திருப்பது மகிழ்ச்சி அளிப்பதாகப் போக்குவரத்து காவலர்கள் மற்றும் ஷேர் ஆட்டோ ஓட்டுநர்கள் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க:காற்றுமாசு அதிகரிப்பு: புழுதி நகரமாக மாறிய "ஹூப்ளி"