உலக நீரிழிவுத் தினம் நவம்பர் 14ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. நீரிழிவு நோயை சமாளிக்க நீரிழிவு நோய் கல்வியும், விழிப்புணர்வும் தேவையென்று உலக நாடுகள் வலியுறத்துகின்றன. அதையொட்டி, "செவிலியர்களும் நீரிழிவு நோயும் என்ற தலைப்பில்" இந்த ஆண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட உள்ளது.
உலகளவில் 46.3 கோடி பேர் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் மட்டும் 7 .7 கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் தமிழ்நாட்டில் 8 முதல் 10 விழுக்காட்டினர் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் நீரிழிவு உயர்நிலைத்துறை செயல்பட்டு வருகிறது. இதில் நாள்தோறும் 800 வெளி நோயாளிகளும், 20 ஆண்கள், 10 பெண்கள் படுக்கை உட்பட 30 படுக்கை வசதிகளில் உள் நோயாளிகளும் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இங்கு அனைத்து விதமான பரிசோதனைகளும் இலவசமாக செய்யப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது.