தமிழ்நாடு

tamil nadu

By

Published : Mar 25, 2022, 11:03 AM IST

ETV Bharat / city

பாலிடெக்னிக் விரிவுரையாளர் சான்றிதழ் பதிவேற்றம்... மீண்டும் கால அவகாசம் நீட்டிப்பு...

பாலிடெக்னிக் விரிவுரையாளர் பணிக்கு சான்றிதழ்களைப் பதிவேற்றம் செய்ய இரண்டாவது முறையாக கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

trb-polytechnic-lecturer-certificate-upload-date-extended-to-april-1
trb-polytechnic-lecturer-certificate-upload-date-extended-to-april-1

இதுகுறித்து ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் 2017-18ஆம் ஆண்டுக்கான பாலிடெக்னிக் கல்லூரி விரிவுரையாளர் காலிப்பணியிடங்களுக்கு நேரடி நியமனத்திற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டது. அந்த வகையில் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள், கல்வித் தகுதி ஆவணங்கள் பெறப்பட்டன. இதையடுத்து விண்ணப்பதாரர்களின் கூடுதல் கல்வித் தகுதிகள், பணி அனுபவச் சான்றிதழ், நன்னடத்தை சான்றிதழ் உள்ளிட்ட பிற சான்றிதழ்களை ஆன்லைனில் பதிவேற்றம் செய்ய அறிவிப்பு வெளியிடப்பட்டது.

இதற்கான கால அவகாசம் 11.3.2022 முதல் 18.3.2022 வரை வழங்கப்பட்டது. இந்த சான்றிதழ்களை பதிவேற்ற கூடுதல் கால அவகாசம் கோரி விண்ணப்பதாரர்களிடமிருந்து கோரிக்கைகள் வந்தன. இந்த கோரிக்கைகளை ஏற்று பதிவேற்றம் செய்வதற்கு கால அவகாசம் 18.3.2022-லிருந்து 25.3.2022 வரை நீட்டிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்தும் விண்ணப்பதாரர்கள் கால அவகாசத்தை நீட்டிக்க கோரிக்கை வைத்துவருகின்றனர். இதையேற்று ஏப்ரல் 1ஆம் தேதி வரையில் கால அவகாசம் நீடிக்கப்படுகிறது.

440 கோரிக்கைகள்:விண்ணப்பதாரர்களிடம் இருந்து லாகின் ஐடி, பாஸ்வேர்டு பயன்படுத்துவது தொடர்பான 440 கோரிக்கைகள் வந்திருந்தன. அவை அனைத்துக்கும் பதிலளிக்கப்பட்டுள்ளன. தனியாக நன்னடத்தை சான்றிதழ் தனியாக பெறத் தேவையில்லை. 240 விண்ணப்பதாரர்களுக்கு மாற்றுச்சான்றிதழையே நன்னடத்தை சான்றிதழாக எடுத்துக்கொள்ளப்பட்டது. இதேபோல ஆசிரியர் தேர்வு வாரிய இமெயிலுக்கு கோரிக்கைகளை அனுப்பும் விண்ணப்பதாரர்கள், அந்த கோரிக்கைக்கு பதில் அளிக்கப்பட்டுள்ளதா என்பதை அவ்வப்போது உறுதி செய்துக் கொள்ள வேண்டும்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:பாலிடெக்னிக் விரிவுரையாளர் சான்றிதழ்களை பதிவேற்ற அவகாசம் நீட்டிப்பு

ABOUT THE AUTHOR

...view details