தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

முதுகலை ஆசிரியர் பணிக்கு விண்ணப்பிக்க கால நீட்டிப்பு! - வேலைவாய்ப்பு செய்திகள்

முதுகலை ஆசிரியர் பணிக்கு விண்ணப்பம் செய்ய காலக்கெடுவை நீட்டித்தும், அந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பம் செய்பவர்களுக்கான வயது வரம்பை உயர்த்தியும் ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

trb pg teacher online apply date extended
trb pg teacher online apply date extended

By

Published : Oct 21, 2021, 6:31 PM IST

சென்னை:ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் 2020-21ஆம் கல்வி ஆண்டிற்கான முதுகலை ஆசிரியர், உடற்கல்வி இயக்குநர் நிலை – 1 மற்றும் கணினி பயிற்றுநர் நிலை – 1 ஆகிய காலிப்பணியிடங்களுக்குப் போட்டித்தேர்வு மூலம் நேரடி நியமனம் செய்வதற்கு அறிவிப்பு செப்டம்பர் 9ஆம் தேதி வெளியிடப்பட்டது.

அதனைத்தொடர்ந்து செப்டம்பர் 18ஆம் தேதி முதல் விண்ணப்பங்கள் http://trb.tn.nic.in/ என்ற இணையதளத்தில் இணையதளம் மூலம் பெறப்பட்டு வருகின்றன. ஆசிரியர்களின் நேரடி நியமனத்திற்கு விண்ணப்பிக்கும் தேர்வர்களுக்கான உச்ச வயது வரம்பினை உயர்த்தி பள்ளிக்கல்வித்துறை 18ஆம் தேதி அறிவித்தது.

உச்ச வயது வரம்பினை சார்ந்து மென்பொருளில் மாற்றம் செய்ய வேண்டியுள்ளதாலும், தேர்வர்கள் இணையதளம் மூலம் விண்ணப்பிப்பதற்கான உரிய கால அவகாசம் அளிக்க வேண்டியுள்ளது.

இதனால், முதுகலை ஆசிரியர், உடற்கல்வி இயக்குநர் நிலை – 1 மற்றும் கணினி பயிற்றுநர் நிலை – 1 ஆகிய பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் பெறுவதற்கான கடைசி தேதி அக்டோபர் 31 முதல் நவம்பர் 9ஆம் தேதி மாலை 5 மணி வரை நீட்டிக்கப்படுகிறது என அறிவிக்கப்படுகிறது.

மேலும், வயது வரம்பை மாற்றம் செய்தற்கான திருத்தப்பட்ட உத்தரவையும் வெளியிட்டுள்ளது.

இதையும் படிங்க:கோவையில் அதிர்ச்சி - மதுபானம் கலந்த ஐஸ்கிரீம் விற்பனை!

ABOUT THE AUTHOR

...view details