சென்னை:தமிழ்நாட்டில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரிய 2207 முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்கள் உடற்கல்வி இயக்குநர் நிலை 1, முதுகலை கணினி ஆசிரியர்கள் ஆகிய பணியிடங்களை நிரப்புவதற்கு ஆசிரியர் தேர்வு வாரியம் விண்ணப்பங்களை செப்டம்பர் 9ஆம் தேதிமுதல் நவம்பர் 14ஆம் தேதிவரை ஆன்லைன் மூலம் பெற்றது.
இந்தப் பணியிடங்களுக்குத் தேர்வு எழுத இரண்டு லட்சத்து 60 ஆயிரம் பேர் விண்ணப்பம் செய்துள்ளனர். இந்நிலையில் ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் லதா வெளியிட்டுள்ள அறிவிப்பில், முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்கள் உடற்கல்வி இயக்குநர் நிலை 1, கணினி ஆசிரியர்கள் நிலை 1 ஆகிய காலிப் பணியிடங்களுக்கு ஆசிரியர்களைத் தேர்வுசெய்வதற்கான எழுத்துத் தேர்வுகள் ஜனவரி 29ஆம் தேதிமுதல் பிப்ரவரி 6ஆம் தேதிவரை நடத்தப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.