சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த ஓய்வுபெற்ற போக்குவரத்துக் கழக ஊழியர்கள் அமைப்பின் பொதுச் செயலாளர் கார்சன், ’ஓய்வு பெறும் நாளன்றே அனைத்து பண பலன்களையும் வழங்க வேண்டும். அகவிலைப்படியை உயர்த்த வேண்டும், மருத்துவப் படி உயர்த்தி வழங்க வேண்டும், குறைந்தபட்ச ஓய்வூதியத்தை உயர்த்த வேண்டும், மருத்துவ காப்பீடு வழங்க வேண்டும், ஓய்வூதியதாரர் இறப்புக்கு பின்பு அவரது குடும்பத்திற்கு குடும்ப பாதுகாப்பு நிதி வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நீண்ட நாட்களாக வலியுறுத்தி வருகிறோம்.
நாளை கோட்டை முற்றுகைப் போராட்டம் - போக்குவரத்துக் கழக ஊழியர்கள் அமைப்பு - செய்தியாளர்கள் சந்திப்பு
சென்னை: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை கோட்டை முற்றுகைப் போராட்டம் நடத்தப்படும் என்று ஓய்வுபெற்ற போக்குவரத்துக் கழக ஊழியர்களின் அமைப்பு தெரிவித்துள்ளது.
govt employees
இருப்பினும் அரசு இதுகுறித்து நடவடிக்கை எடுக்காததால் நாளை (செப். 24) கோட்டை முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என்றார்.