சென்னை : ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் இன்று முதல் 50 சதவீத இருக்கைகளுடன் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
பேருந்து பயணம், மே மாதம் பாஸ் ஜூலை 15 வரை செல்லும் - அமைச்சர் ராஜகண்ணப்பன்
பேருந்து பயணத்திற்கு மே மாதம் 1000 ரூபாய் பாஸ் பெற்று இருந்தவர்கள், ஜூலை 15 வரை பயன்படுத்தலாம் என போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார்.
சென்னை பல்லவன் சாலையில் உள்ள மத்திய பனிமலையில் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் ஆய்வு மேற்கொண்டார். இதைத்தொடர்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், சென்னை மாநகராட்சியில் 1700 பேருந்துகள் இயக்கப்படுவதாகவும், தேவைக்கு ஏற்ப பேருந்துகள் அதிகரிக்கப்படும் என கூறினார்.
திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 3 மாவட்டங்களில் 750 பேருந்துகள் உள்ள நிலையில், தற்போது 200 பேருந்துகள் இயக்கப்படுவதாக அவர் கூறினார். அரசு பேருந்துகளில் பெண்கள், மாற்று திறனாளிகள் மற்றும் மூன்றாம் பாலினத்தவர் இலவசமாக பயணம் செய்ய ரூ. 1200 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
அதேபோல் மாற்று திறனாளிகள் மற்றும் மூன்றாம் பாலினத்தவர் இலவசமாக பயணம் செய்ய அடையாள அட்டையை காட்டி பயண சீட்டை பெற்றுக்கொள்ள வேண்டும் என்று அமைச்சர் ராஜகண்ணப்பான் கூறினார்.
மே மாதம் 1000 ரூபாய் பாஸ் பெற்று இருந்தவர்கள், அதனை ஜூலை மாதம் 15ஆம் தேதி வரை பயன்படுத்தலாம் என்றும், இரவு 9.30 மணி வரை பேருந்துகள் இயக்கப்படும் எனவும் அமைச்சர் ராஜகண்ணப்பன் கூறினார்.
இதையும் படிங்க :முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு வாள்வீச்சு வீராங்கனை நன்றி!