தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

பேருந்துகளில் பேடிஎம் மூலம் பணம் செலுத்துவது எப்படி? - பேடிஎம்

சென்னை: பேருந்துகளில் பேடிஎம் மூலம் பணம் செலுத்தும் நிலையான இயக்க முறையை மாநகர போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ளது.

ticket
ticket

By

Published : Jun 2, 2020, 3:03 PM IST

கரோனா பரவலுக்கு மத்தியில் பொது போக்குவரத்தை இயக்க அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், பயணிகள் மற்றும் நடத்துநர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், பேருந்துகளில் நேரடி பணப்பரிமாற்றம் செய்வதற்கு பதிலாக ’பேடிஎம்’ செயலி மூலம் பணம் செலுத்தும் முறை அமல்படுத்தப்படும் என போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

அதன்படி, பேருந்துகளில் பேடிஎம் மூலம் பணம் செலுத்தும் நிலையான இயக்க முறையை (Standard operating procedures) சென்னை மாநகர போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ளது.

முதல்கட்டமாக, பேருந்தில் ஏறியதும் தான் செல்லும் இடத்திற்கான கட்டணம் எவ்வளவு என நடத்துநரிடம் பயணி கேட்க வேண்டும்.

இதற்கான கட்டணத்தை நடத்துநர் தெரிவித்ததும், பேருந்தில் ஒட்டப்பட்டுள்ள ’க்யூ ஆர் கோடை’ (QR code) ஸ்கேன் செய்து, பயணக் கட்டணத்தை செலுத்த வேண்டும். பணம் செலுத்தப்பட்டதும் பரிவர்த்தனை எண், தொகை, பேருந்தின் வழித்தடம், பயண தேதி, நேரம் ஆகியவை பயணியின் செயலியில் காண்பிக்கப்படும்.

பேருந்துகளில் ’பேடிஎம்’ மூலம் பணம் செலுத்துவது எப்படி?

கட்டணம் செலுத்தப்பட்ட பின், நடத்துநர் இருக்கைக்கு மேல் பொருத்தப்பட்டிருக்கும் ஒலிப்பெருக்கியில் கட்டணம் செலுத்தியதற்கான அறிவிப்பு வெளியாகும். அதன் பின் பயணியின் செல்போனில் உள்ள தகவலின் அடிப்படையில் நடத்துநர் பயணச் சீட்டை வழங்குவார். மேலும், நடத்துநரும் தனது செல்போனில் வரும் குறுந்தகவல் அடிப்படையில் பயணச்சீட்டு சரியாக வழங்கப்பட்டுள்ளதா என சரி பார்த்துக்கொள்வார்.

ஒவ்வொரு ஸ்டேஜ் முடித்த பின்னரும், நடத்துநர் தனது குறிப்பேட்டில் பேடிஎம் மூலம் செய்யப்பட்ட பரிவர்த்தனைகளை பதிவு செய்ய வேண்டும். பயணம் நிறைவடைந்த பின், பேடிஎம் செயலி மூலம் எவ்வளவு தொகை வசூலிக்கப்பட்டது என்ற விவரத்தை நடத்துநர் குறித்துக் கொள்ள வேண்டும். இதன் மூலம் செய்யப்படும் ஒவ்வொரு பரிவர்த்தனை தொடர்பான தகவல்களும் மின்னஞ்சல் வாயிலாக செல்லும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: பொறியியல் கலந்தாய்வு: ஆன்லைன் பதிவு விரைவில் தொடங்கும்!

ABOUT THE AUTHOR

...view details