தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

கொசு புழுக்களை ஒழிக்க ட்ரோன் மூலம் மருந்து தெளிக்கும் பணிகளில் திருநங்கைகள் - சென்னை மாநகராட்சி திட்டம் - Drone spraying to eradicate mosquito worms in Chennai

சென்னை மாநகராட்சியில் ட்ரோன்களைப் பயன்படுத்தி கொசு புழு ஒழிக்கும் பணியில் திருநங்கைகளை பணியமர்த்தப்பட உள்ளனர்.

சென்னை மாநகராட்சி
சென்னை மாநகராட்சி

By

Published : Jun 29, 2022, 11:58 AM IST

சென்னை மாநகராட்சியில் 170 கிமீ பரப்பளவு கொண்ட 5 பெரிய நீர் வழித்தடங்கள், 77.90 கிமீ பரப்பளவு கொண்ட 31 சிறிய கால்வாய்கள் என்று மொத்தம் 248 கி.மீ-க்கு நீர் வழித்தடங்கள் உள்ளன. இவற்றில் கொசு புழுக்களை ஒழிக்க ட்ரோன் மூலம் மருந்து தெளிக்கும் பணி கடந்த ஆண்டு 3 முறையும், இந்தாண்டு 2 முறையும் மேற்கொள்ளப்பட்டது. இந்த முறை நல்ல பலனை அளித்த நிலையில் சென்னை முழுவதும் 5 ட்ரோன்களை பயன்படுத்தி கொசு புழு ஒழிப்பு பணியை மேற்கொள்ள சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.

அதன்படி, இப்பணிகளுக்காக அண்ணா பல்கலைக்கழகத்தின் தமிழ்நாடு ஆளில்லா ட்ரோன் எனப்படும் வான்வழி வாகனத்தின் மூலம் மேற்கொள்ளப்படவுள்ளது. இந்நிலையில் ட்ரோன்களை இயக்குவதற்கான உரிமம் பெற்ற திருநங்கைகளைக் கொண்டு இயக்கவும் மாநகராட்சி முடிவு செய்துள்ளது.

இதன்படி, 7 ட்ரோன்களை இயக்க 7 திருநங்கைகளைப் பயன்படுத்த சென்னை மாநகராட்சி அனுமதி அளித்துள்ளது. இதன்படி தமிழ்நாடு ஆளில்லா வான்வழி வாகனம் கழகத்தின் மூலம் பயிற்சி பெற்று உரிய உரிமம் பெற்றுள்ள திருநங்கைகள் இந்த ட்ரோன்களை இயக்க உள்ளனர். இவர்களுக்கு சென்னை மாநகராட்சியிலிருந்து மாதம் ரூ.25 ஆயிரம் ஊதியம் வழங்கப்படவுள்ளது.

இதையும் படிங்க: அடிப்படை வசதிகள் இன்றி தலைநகரின் முக்கிய பேருந்து நிலையங்கள்...நடவடிக்கை எடுக்குமா தமிழக அரசு?...

ABOUT THE AUTHOR

...view details