தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jul 17, 2021, 7:09 AM IST

ETV Bharat / city

தன்னம்பிக்கை தளராத திருநங்கையின் செம்ம டேஸ்ட் தேநீர் கடை!

சென்னையில் கடந்த 10 ஆண்டுகளாக ஆட்டோ ஓட்டி வந்த திருநங்கை கரோனா பேரிடரால் வாழ்வாதாரத்தை இழந்து நிலையில், தன்னம்பிக்கையை தளரவிடாமல் புதிய பாதையில் தன்னுடைய வாழ்க்கை பயணத்தை தொடங்கியுள்ளார்.

செம்ம டேஸ்ட் டீக்கடை
செம்ம டேஸ்ட் டீக்கடை

சென்னை: வண்ணாரப்பேட்டை கல்லறை சாலை பகுதியைச் சேர்ந்தவர் வைஷ்ணவி பாலகிருஷ்ணன் (36). திருநங்கையான இவர் கடந்த 2009ஆம் ஆண்டு முதல் வடசென்னைக்குள்பட்ட பகுதிகளில் ஷேர் ஆட்டோ ஓட்டி வந்தார்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக கரோனா பரவலுக்காக போடப்பட்ட ஊரடங்கால் ஆட்டோ ஓட்ட முடியாமல் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வந்தார்.

செம்ம டேஸ்ட் டீக்கடை

இந்நிலையில் தண்டையார்பேட்டை பகுதியில் டீக்கடை அமைக்க திட்டமிட்டு தண்டையார்பேட்டை திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் காவல் நிலையத்திற்கு அருகில் செம்ம டேஸ்ட் என்ற டீக்கடையை திறந்துள்ளார்.

இவருக்கு உதவும் வகையில் ரோட்டரி கிளப் ஆப் சென்னை ஹால்மார்க் என்ற அமைப்பினர் கடைக்கு தேவையான உபகரணங்களை திருநங்கை வைஷ்ணவிக்கு வழங்கினா்.

'திருநங்கையுடன் காதல்' - பெற்றோர் சம்மதத்துடன் திருமணம்!

இந்தக் கடையை சென்னை வடக்கு மண்டல போக்குவரத்து இணை ஆணையர் லலிதா லட்சுமி, வடசென்னை போக்குவரத்து துணை ஆணையர் பிரதீப் ஆகியோர் தொடங்கிவைத்தனர்.

புறக்கணிப்பால் நஷ்டம்

இதுகுறித்து திருநங்கை வைஷ்ணவி கூறுகையில், "நான் கடந்த 2009ஆம் ஆண்டு முதல் ஆட்டோ ஓட்டி வந்தேன். முதலில் திநகர் பகுதியில் மேஜிக் எனப்படும் மினிவேனை சொந்தமாக வாங்கி ஓட்ட தொடங்கினேன்.

செம்ம டேஸ்ட் டீக்கடை

ஆனால் நான் திருநங்கை என்பதால் மக்கள் என்னை புறக்கணித்தனர். இதனால் எனக்கு ரூ.5 லட்சத்திற்கும் அதிமாக நஷ்டம் ஏற்பட்டு மிகுந்த சிரமம் அடைந்தேன்.

வாகனம் ஓட்டும் முதல் திருநங்கை

மேலும் வேறு தொழிலுக்கு செல்ல விருப்பம் இல்லாததால் வடசென்னை பகுதியில் ஷேர் ஆட்டோ சொந்தமாக வாங்கி ஓட்டி வந்தேன். வாகனம் ஓட்டும் முதல் திருநங்கை என்ற பெருமையை பெற்றுள்ளேன். மேலும் பல சமூக சேவையில் ஈடுபட்டு பல்வேறு விருதுகளை பெற்றுள்ளேன்.

பலரின் ஓட்டல்களையும் பொருட்படுத்தாததால் இப்போது நான் ஒரு ஓட்டுநர் - திருநங்கை அபர்ணா

கடந்த இரண்டு ஆண்டுகளாக கரோனா காலத்தில் போடப்பட்ட ஊரடங்கால் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வந்தேன். தற்போது தளர்வுகள் அளிக்கப்பட்டாலும் மெட்ரோ சேவையும், பேருந்தில் பெண்களுக்கு இலவசம் என்ற திட்டமும் என்னுடைய வாழ்வாதாரத்தை பெரும் பாதிப்புக்குள்ளாக்கியது.

புதிய பாதை

இந்த கரோனா பேரிடர் காலத்தில் வாழ்வாதாரத்தை இழந்த நிலையில் என்ன செய்வதென்று தெரியாமல் வாகனம் ஓட்டுவதை விட்டுவிட்டு டீக்கடை, சிற்றுண்டி தொடங்கலாம் என இந்த கடையை ஆரம்பித்தேன்.

தற்போது டீ, காபி விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில் இன்னும் ஒரு வார காலத்திற்குள் போண்டா, பஜ்ஜி போன்றவற்றை தயார் செய்ய உள்ளேன். மக்களின் ஆதரவை தொடர்ந்து டிபன், சாப்பாடு, பாஸ்ட்புட் போன்ற உணவு வகைகளை தயார் செய்யவும் திட்டமிட்டுள்ளேன்.

'ஜல்லிக்கட்டு காளை வளர்க்கும் வீரத் திருநங்கை நான்' - பெருமையுடன் பூரிக்கும் சிந்தாமணி

இந்தக் கடையில் என்னை போன்று கரோனா காலத்தில் வாழ்வாதாரத்தை இழந்த திருநங்கைகளான ரம்யா, விசாகா ஆகியோரை உதவிக்காக வேலைக்கு வைத்துள்ளேன்.

ஆட்டோ ஓட்டும்போது ஏற்கனவே மக்களின் புறக்கணிப்பால் பெரும் நஷ்டத்தை சந்தித்தேன். தற்போது மக்களை நம்பி என்னுடைய புதிய வாழ்க்கை பணத்தை தொடங்கியுள்ளேன்" என்று தெரிவித்தார்.

திருநங்கை அன்பு ரூபியின் அன்பு சூழ் பயணம்...

ABOUT THE AUTHOR

...view details