சென்னை: மயிலாப்பூர் சாந்தோமில் பள்ளி அருகில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் இருதரப்பு மாணவர்கள் இடையே நேற்று முன்தினம் (மே.2) மோதல் ஏற்பட்டது. மயிலாப்பூர் காவல் நிலையத்தில் இருந்து தலைமை காவலர் விஜயகுமார் பள்ளிக்கு சென்று, விசாரணை நடத்தினார்.
அப்போது பள்ளியில் நின்று கொண்டிருந்த முன்னாள் மாணவர் முகமது இப்ராகிம் என்பவரை காவலர் விஜயகுமார் மூக்கில் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த முகமது இப்ராகிம், மயிலாப்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.