இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், “சென்னை தொழில்நுட்ப சேவைகள் பிரிவு ஏடிஜிபியாக பணியாற்றி வந்த டேவிட்சன் தேவாசீர்வாதம் ஊனமாஞ்சேரி தமிழ்நாடு காவலர் அகாடமியின் இயக்குநராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். உயர் நீதிமன்ற வழக்குகள் கண்காணிப்பு பொறுப்பு உதவி இன்ஸ்பெக்டர் ஜெனரலாக (ஏ.ஐ.ஜி.பி) பணியாற்றி வந்த சுதாகர் சென்னை சைபர் கிரைம் பிரிவு-1 காவல் கண்காணிப்பாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
ஊனமாஞ்சேரி தமிழ்நாடு காவலர் அகாடமியின் இயக்குநராக பணியாற்றிவந்த அமரேஷ் புஜாரி சென்னை தகவல் தொழில்நுட்ப சேவை பிரிவு ஏ.டி.ஜி.பி.,யாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் லஞ்ச ஒழிப்புத்துறை டி.ஜி.பி.,யாக பிராஜ் கிஷோர் ரவி நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.