இது குறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள ஆணையில்,
- தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழக இயக்குநர் விஷ்ணு, திருநெல்வேலி மாவட்ட ஆட்சியராக நியமனம்.
- தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியராக மாற்றம்.
- சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஜெயகாந்தன், மீன்வள இயக்குநராக நியமனம்.
- திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர், சுகாதாரம் மற்றும் குடும்பநலத் துறை இணைச் செயலாளராக நியமனம்.
- திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் கந்தசாமி, குறைதீர்ப்பு சிறப்பு அலுவலராக நியமனம்.
- தென்காசி மாவட்ட ஆட்சியர் அருண் சுந்தரம் தயால், சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை இணைச் செயலாளராக நியமனம்.
- சுகாதாரத்துறை இணைச் செயலாளர் கிளாட்ஸ்டோன் புஷ்பராஜ், ராணிப்பேட்டை ஆட்சியராக நியமனம்.
- தேசிய சுகாதாரத் திட்ட இயக்குநர் செந்தில் ராஜ், தூத்துக்குடி ஆட்சியராக நியமனம்.
- ராமநாதபுர மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ், வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சி இயக்குநராக நியமனம்.
- மீன்வளத்துறை மேலாண் இயக்குநர் சமீரன், தென்காசி ஆட்சியராக நியமனம்.
- சென்னை மாநகராட்சி இணை ஆணையர் மதுசூதன் ரெட்டி, சிவகங்கை ஆட்சியராக நியமனம்.
- அகதிகள் மறுவாழ்வுத்துறை இயக்குநர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், ராமநாதபுரம் ஆட்சியராக நியமனம்.