தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

கீழமை நீதிமன்றங்களில் 55 நீதிபதிகள் இடமாற்றம் - 55 நீதிபதிகள் இடமாற்றம்

தமிழ்நாடு முழுவதும் கீழமை நீதிமன்றங்களில் 55 நீதிபதிகளை இடமாற்றம் செய்து உயர் நீதிமன்ற தலைமை பதிவாளர் உத்தரவிட்டுள்ளார்.

55 நீதிபதிகள் இடமாற்றம்
55 நீதிபதிகள் இடமாற்றம்

By

Published : Apr 26, 2022, 7:35 AM IST

சென்னை: உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி உத்தரவின் அடிப்படையில் எடுக்கப்பட்டுள்ள மாற்றங்கள் குறித்து தலைமை பதிவாளர் பி. தனபால் வெளியிட்டுள்ள அறிவிப்பாணையில், "செங்கல்பட்டு மாவட்ட கூடுதல் நீதிபதி கே.ஐயப்பன் சென்னை உயர் நீதிமன்றத்தின் தமிழ் சட்ட இதழின் முதன்மை ஆசிரியராக நியமிக்கப்பட்டுள்ளார்.

மதுரையில் உள்ள ஜெ.ப்ளோரா, காஞ்சிபுரத்தில் உள்ள ஜெ.சந்திரன், சேலத்தில் உள்ள எஸ்.முருகானந்தம், எல். ஆப்ரஹாம் லிங்கன், தூத்துக்குடியில் உள்ள வி.பாண்டியராஜ், பூந்தமல்லியில் உள்ள ஏ.ரமேஷ், வேலூர் திருப்பத்தூரில் உள்ள ஆர்.தூதிராமேரி ஆகியோர் சென்னையில் உள்ள நீதிமன்றங்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

ஏற்கனவே சென்னையில் பணியாற்றும் ஜெ. ஸ்ரீதேவி, டி.வி.ஆனந்த், எஸ்.சுஜாதா, டாக்டர் எஸ்.டி.லக்‌ஷ்மி ரமேஷ் சென்னையிலேயே வெவ்வேறு நீதிமன்றங்களில் பணியிடமாற்றம் செய்து உத்தரவிடப்பட்டுள்ளது. இதேபோல நாகர்கோவில், மேட்டூர், மன்னார்குடி, பட்டுக்கோட்டை, ஈரோடு, பெரம்பலூர், தேனி, திருவண்ணாமலை, தஞ்சாவூர் உள்ளிட்ட நீதிமன்றங்களில் பணியாற்றுபவர்கள் என 55 நீதிபதிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்" இவ்வாறு அறிவிப்பாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:ஜெயலலிதாவின் கூற்றுக்கு எதிராக அதிமுக எம்.எல்.ஏக்கள் - காங்கிரஸ் எம்.எல்.ஏ செல்வப்பெருந்தகை

ABOUT THE AUTHOR

...view details