மதுரை:கரோனா தொற்று காலத்தில் நிறுத்தப்பட்ட ரயில்கள் படிப்படியாக மீண்டும் இயக்கப்பட்டு வருகின்றன. அதன்படி எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் - நாகர்கோவில் - எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் வாராந்திர சேவை விரைவு ரயில் ஏப்.15 முதல் இயக்கப்பட உள்ளது. எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் - நாகர்கோவில் வாராந்திர விரைவு ரயில் (12689) சென்னையிலிருந்து ஏப்.15 முதல் வெள்ளிக்கிழமைகளில் இரவு 07.00 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 10.55 மணிக்கு நாகர்கோவில் சென்று சேரும்.
நிறுத்துமிடங்கள்:மறுமார்க்கத்தில் நாகர்கோவில் - எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் வாராந்திர சேவை விரைவு ரயில் (12690) நாகர்கோவிலில் இருந்து ஏப்.17 முதல் ஞாயிற்றுக்கிழமைகளில் இரவு 07.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 11.40 மணிக்கு சென்னை சென்று சேரும். நாகர்கோவில் செல்லும் விரைவு ரயில் அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை, திருப்பத்தூர், மொரப்பூர், சேலம், நாமக்கல், கரூர், திருச்சி, திண்டுக்கல், கொடைக்கானல் ரோடு, மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, திருநெல்வேலி ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.