சென்னை ஆவடியில் மத்திய ரிசர்வ் காவல் படை பயிற்சி முகாமில் பயிற்சியை முடித்த 407 உத்திரபிரதேச காவலர்களின் சத்திய பிரமாண விழா நடைபெற்றது.
டி.ஐ.ஜி பிரவீன் சி.காக் தலைமையில் நடைபெற்ற இந்த பயிற்சி முகாமில் சிறந்த பயிற்சியாளர்களைக் கொண்டு 407 உத்திரபிரதேச காவலர்களுக்கு 24 வார கடின பயிற்சி அளிக்கப்பட்டது.
இந்த பயிற்சியில் நவீன ஆயுதங்களை கையாளுதல், குண்டெறிதல், துப்பாக்கி சுடுதல், தீவிரவாத நடவடிக்கையை முறியடித்தல், யுத்தகலை மேலாண்மை, பொது அறிவு உள்ளிட்ட பயிற்சிகள் வழங்கப்பட்டன.