சென்னை:நேபாளத்தைச் சேர்ந்த சக்ரா என்பவர் வடபழனி பூக்காரத் தெருவில் வாடகை வீட்டில் இருந்தபடி, தனியார் நிறுவனம் ஒன்றில் செக்யூரிட்டியாகப் பணியாற்றி வருகிறார். இவருக்கு மஞ்சு(23) என்ற மனைவியும் ஒரு வயதில் குழந்தை ஒன்றும் உள்ளது. இவர் அவ்வப்போது குடிபோதையில் தனது மனைவியை துன்புறுத்தி வந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், சிறுநீரகப் பிரச்சனைக்காக மருத்துவமனையில் சிகிச்சையிலுள்ள மனைவி மஞ்சுவின் தாயாரை சென்று கவனித்துகொள்வது தொடர்பாக, இவருக்கும் இவரது மனைவி மஞ்சுவிற்கும் இடையே தகராறு இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.