சென்னை:பெரம்பூர் பேப்பர் மில்ஸ் சாலை அகரம் சந்திப்பு அருகே எஸ்.ஆர்.பி கோயிலில் 60 வயதுடைய மூதாட்டி ஒருவர் நேற்று (அக்.28) சாமி கும்பிட்டுக்கொண்டிருந்தார். அப்போது, திடீரென விளக்கிலிருந்து பரவிய தீ, மூதாட்டியின் புடவையில் பட்டு கொளுந்துவிட்டு எரியத் தொடங்கியது.
இதனைக் கண்ட போக்குவரத்து தலைமை காவலர் செந்தில் குமார், உடனடியாக ஓடிவந்து மூதாட்டியின் புடவையிலிருந்து உடலுக்கு தீ பரவாத படி கைகளால் தீயை அணைத்தார். இதில், மூதாட்டி காயமின்றி உயிர் தப்பினார். ஆனால், காவலருக்கு லேசான காயம் ஏற்பட்டது.