சென்னை: மகாத்மா காந்தியின் 74ஆவது நினைவு நாளையொட்டி தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என் ரவி, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆகியோர் அண்ணல் காந்தியின் படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
அதனைத் தொடர்ந்து மகாத்மா காந்தி நினைவு தினத்தை முன்னிட்டு இன்று(ஜன.30) சென்னையில் பல்வேறு முக்கிய சாலை சந்திப்புகளில் இரண்டு நிமிடம் வாகனங்களை நிறுத்தி போக்குவரத்து காவல்துறையினர் அஞ்சலி செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது.