சென்னை:சென்னை விமான நிலையம் அருகே நேற்று(மார்ச்.6) முதலமைச்சர் வருகையின்போது போக்குவரத்து உதவி ஆய்வாளர் சுந்தர்ராஜன்(53), பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அவ்வழியாக வரும் கனரக வாகனங்களைத் திருப்பி விட்டுக் கொண்டிருந்தார்.
அப்போது கிண்டி நோக்கி வந்த இருசக்கர வாகனம் ஒன்று அவர் மீது மோதியது. இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த அவருக்கு முகத் தாடையில் எலும்பு முறிவு ஏற்பட்டது. உடனே அங்குள்ளவர்கள் ரத்தம் சொட்ட, சொட்ட சிகிச்சைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.