தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

மழையால் சென்னையில் போக்குவரத்து மாற்றம்! - சென்னை மாவட்ட செய்திகள்

சென்னையில் பெய்துவரும் கனமழை மற்றும் மழை பாதிப்புகள் காரணமாக போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அறிவிப்பு
சென்னை மாநகர் போக்குவரத்து காவல்

By

Published : Nov 11, 2021, 5:18 PM IST

சென்னை: வடகிழக்குப் பருவ மழையால் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

மாதவரம் போக்குவரத்து காவல் எல்லைக்குட்பட்ட எம்.ஆர்.எச் சாலை மஞ்சம்பாக்கம் ரவுண்டானாவில் இருந்து செங்குன்றம் நோக்கி செல்லும் வழியில் ரெட்டேரியில் நிரம்பிய நீரானது, புழல் வில்லேஜ் ரோடு கால்வாயை அடைவதால் எம்.ஆர்.எச் சாலையில் அதிகமாக வெள்ளப்பெருக்காக உள்ளது.

நெடுஞ்சாலைத்துறை மற்றும் போக்குவரத்து காவல் துறையின் மூலம் சென்னை சாலைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

மாநகருக்குள் உள்வரும் மற்றும் வெளிசெல்லும் வாகனங்கள் அனைத்தும் சாலையின் ஒரே பக்கத்தின் வழியாக செல்கின்றது.

திருமலைப்பிள்ளை ரோடு, காமராஜர் இல்லம் முன்பு சாலையில் பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால், வள்ளுவர்கோட்டம் நோக்கி வாகனங்கள் செல்ல அனுமதியில்லை.

வாணிமஹால் - பென்ஸ்பார்க் சந்திப்பில் வாகனங்கள் திருப்பி விடப்படுகிறன்றன. திருப்பி விடப்படும் வாகனங்கள் வள்ளுவர் கோட்டத்தில் இருந்து வாணிமஹால் செல்லும் திருமலைப் பிள்ளை ரோட்டில் செல்லலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பெரம்பூர் - பேரக்ஸ் சாலையில் உள்ள அஷ்டபுஜம் ரோடு சந்திப்பில், சாலையில் பள்ளம் ஏற்பட்டதால், மாநகரப் பேருந்துகள் செல்ல முடியாத காரணத்தால் டவுட்டன் சந்திப்பில் இருந்து புளியந்தோப்பு நோக்கி செல்லும் பேருந்துகள், பிரிக்கிளின் ரோடு மற்றும் ஸ்டரகன்ஸ் ரோடு வழியே புளியந்தோப்பு சென்றடையுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சென்னையில் கனமழை

மேலும், புளியந்தோப்பில் இருந்து டவுட்டன் செல்லும் பேருந்துகள், ஸ்டரகன்ஸ் ரோடு, பிரிக்கிளின் சாலை, புரசைவாக்கம் நெடுஞ்சாலை வழியாக செல்ல வேண்டும்.

பழைய வேளச்சேரி சாலையில் மரம் விழுந்ததால், போக்குவரத்து மாற்றப்பட்டு கிண்டி கான்கார்டு சந்திப்பில் இருந்து ஹால்டா மற்றும் சின்னமலை நோக்கி போக்குவரத்து திருப்பி விடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: சென்னையில் 11 சுரங்கப்பாதைகள் மூடல் - போக்குவரத்து நிறுத்தம்

ABOUT THE AUTHOR

...view details