சென்னை:பிரதமர் மோடி நாளை (மே 26) ஆறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்ட சென்னைக்கு வருகை தர உள்ளார். இதற்கான விழா பெரியமேட்டில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெற உள்ளது.
பிரதமரின் வருகையையொட்டியும் விழா நடைபெறும் அதைச்சுற்றி உள்ள சாலைகளிலும் குறிப்பாக ஈ.வே.ரா சாலை, தாஸபிரகாஷ் முதல் சென்னை மருத்துவக்கல்லூரி சந்திப்பு வரை, மாலை 3 மணி முதல் இரவு 8 மணி வரை போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்பு உள்ளது.